குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். ஐந்து வருடமாக வீடு கட்டத் துவங்கி, முடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உங்களிடம் அமிர்ததாரா மகா மந்திர தீட்சை பெற்று, எப்படியும் வீட்டை கட்டி முடிக்க வேண்டும். அதற்கு இறைவன் துணை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் மந்திரத்தை உறுதியுடன் ஜெபித்து வந்தேன். சென்ற வாரம் மீண்டும், வீடு கட்டும் பணியை துவக்கி விட்டேன். உங்கள் அருளாலும், ஆசிர்வாதத்தாலும் வீட்டு வேலை நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யவும்.
இப்படிக்கு,
துரைசாமி,
வாசுதேவநல்லூர்.
குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்டு, இரண்டு வருடங்கள் போராடி வந்தேன். உங்களிடம் தீட்சை பெற்ற பிறகு, கடன் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அமைந்து, இன்று முதல் பங்கு கடன் வந்துவிட்டது. மகிழ்வோடு வீடு கட்ட துவங்க போகிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை.
இப்படிக்கு,
லூர்து மரியான்,
தூத்துக்குடி.
குருஜி அவர்களுக்கு, வணக்கம். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பூர்விக இடங்கள் பலகாலமாக பாகப்பிரிவினை செய்யப்படாமல் இருந்தது. அமிர்ததாரா மஹாமந்திர தீட்சை எடுத்த பிறகு, பாகப்பிரிவினைக்கு சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஒத்துக்கொண்டு, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி இருக்கிறோம். எங்கள் காரியம் நல்லபடி நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள்.
இப்படிக்கு,
ஜெயராஜ்,
நாகர்கோவில்.
குருஜி ஐயா வணக்கம். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். ஒரு வருடமாக வாங்கி போட்ட நிலங்கள் எதுவும் விற்பனை ஆகாமல், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். நீங்கள் தரும் மந்திர தீட்சை அறிந்து, அதை நம்பிக்கையோடு பெற்றுக்கொண்டேன். இப்போது சில இடங்கள் விற்பனையாக துவங்கி இருப்பது எனக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. வாழ்வளித்த உங்களுக்கு எத்தனைமுறை நன்றி கூறினாலும் போதாது.
இப்படிக்கு,
மாரியப்பன்,
கோபிச்செட்டிபாளையம்.
(பயன்பெற்றவர்களின் அனுபவ கடிதங்கள் இன்னும் தொடரும்...)
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும் தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம். கடிதம் அனுப்ப - sriramanandaguruji@gmail.com