( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



Idocs Guide to HTML  வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை  கொடுக்க படுகிறது தொடர்புக்கு Cell No = +91-8110088846 - Idocs Guide to HTML


Share !
This Post





ஆசையை நிறைவேற்றும் அமிர்ததாரா !


    ள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப்தி கொள்ள பார்க்காது. இன்னும் வேண்டும் என்ற ஆசை, இது போதாது என்ற பேராசை கொண்ட மனிதர்கள் உலக வீதியில் நாலாபுறத்திலும் இருப்பதை நாமறிவோம். ஆயினும் அடிப்படை தேவைக்கு கூட வசதியும், வாய்ப்பும் இல்லாமல் அல்லாடும் ஜீவன்களை அன்றாடம் பார்க்கிறோம் லட்சக்கணக்கில்.

காரும், பங்களாவும் வேண்டுமென்று ஆசைப்படவில்லை. அந்த அப்பாவி ஜீவன்கள் பசிக்கும் பட்டினிக்கும் உணவும், உடம்பை மறைக்க ஆடையும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. வாழ்வதற்கு திண்ணை கூட இல்லாமல், பல்லாயிரம் பேர்கள் தவிக்கும் போது ஒரு மனிதனுக்கு ஒன்பது வீடுகள் இருக்கிறது. இது சமுதாயத்தின் சீர்கேடா? இயற்கையின் சாபமா? ஆண்டவனின் திருவிளையாடலா?



 வாங்குவது ஒற்றை சம்பளம், பசியாற வேண்டியதோ ஏழு வயிறுகள். இதில் அன்றாடத்தேவையை எப்படி பூர்த்தி செய்வது? பிச்சைக்காரனை போல் தெருவிலே வாழவும் முடியவில்லை. பணக்காரனை போல் குளிரூட்டப்பட்ட அறையினில் உறங்கவும் முடியவில்லை. இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் நடுத்தர உயிர்களும், இந்த பூமியில் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன.

பசித்தவன் சோறு வாங்க பணம் கேட்கிறான். நடுத்திர மனிதனும் நல்லவண்ணம் வாழ பணம் கேட்கிறான். பணக்கார வர்க்கத்தில் இருப்பவன் கூட இன்னும் வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்று பணம் கேட்கிறான். எவருமே பணத்தை வேண்டாம் என்று ஒதுக்குவார் இல்லை. உலகே மாயை, வாழ்வே மாயை என்று சந்நியாசம் சென்றவனுக்கு கூட வழிபாடு நடத்த இந்த காலத்தில் பணம் தேவைப்படுகிறது.

உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு உருண்டாலும், ஓட்டுவது தான் ஒட்டுமென்று அறிவுக்கு தெரியும். ஆனால் ஆசை, அறிவை வேலை செய்ய விடுவது இல்லை. எந்த வகையிலாவது பணத்தை தேடு என்று சரீரம் என்ற குதிரையை சாட்டையால் சொடுக்கிய வண்ணமே இருக்கிறது. மனிதன் அறிவைத்தேடி ஓடுகிறானோ இல்லையோ அன்பைத்தேடி அலைகிறானோ இல்லையோ பணத்தை தேடி நித்த நித்தம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறான். ஓயாமல் உழைக்கிறான், உறங்காமல் பாடுபடுகிறான். ஆனாலும் அவன் கைகளில் தேவைக்கான செல்வம் கிடைக்கவில்லை.


இந்த நிலையிலிருந்து தப்பிக்க அதிர்ஷ்டப்படி பெயரை மாற்றிக்கொண்டால், நல்லது நடக்குமா? அதிர்ஷ்ட கற்களை அணிந்தால் சுகம் கிடைக்குமா? அஞ்சனங்கள், யாகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் செய்தால் நிலைமையில் கொஞ்சமேனும் மாறுதல் ஏற்படுமா? என்று துடியாக துடிக்கிறான். இவைகள் சில நேரங்களில் பலன்களை துல்லியமாக தருகிறது. பல நேரங்களில், பண செலவாகவே முடிகிறது. இதனால் சம்மந்த பட்டவனின் மனம் தள்ளாடுகிறது. சாஸ்திரம் என்பதும், பரிகாரம் என்பதும் பயனற்ற செயலா? அதில் பயன் இல்லையா? என்ற சந்தேக மேகம் கருமையாகி மின்னலாக வெட்டி இடியாகவும் இடிக்கிறது.

இவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். பெயரை மாற்றுவதும், நவரத்தினங்கள் அணிவதும், பரிகார பூஜைகள் நடத்துவதும் நமது முன்னோர்கள் சொன்ன வழிகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகள் சக்தி வாய்ந்தவைகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவைகள் அனைத்துமே நமக்காக, நமது முன்னேற்றத்திற்காக, வெளியில் செய்யப்படும் ஏற்பாடுகள், புறக்கருவிகள். அவைகளில் சக்தி அலைகள் நமது உடம்பிற்குள் சரியான கோணத்தில் புகுந்தால் மட்டுமே பயனைத்தரும். உட்புகவில்லை என்றால் எதிர்பார்த்தது கிடைக்காது.

எனவே நமது எண்ணங்கள் நிறைவேறுவதற்கு புறக்காரணங்களை மட்டுமே மேற்கொள்ளாமல், வேறு சில அகக்காரியங்கள் இருக்கிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். காரணம் நமது சாஸ்திரங்களும், வேத நூல்களும் நமக்கு தேவையான அனைத்தும் நமக்குள்ளேயே மறைந்திருப்பதாக சொல்கின்றன. அந்த சக்திகளை கண்டுபிடித்து, உசுப்பி விட்டால் நடக்காததும் நடக்கும். நடக்கவே முடியாததும், முடியாது என்று ஓரங்கட்டபட்டவைகளும் நடக்கும் நடந்தே தீரும் அது எப்படி?


மனித உடம்பு இருக்கிறதே இது ஒரு அற்புதமான பொக்கிஷம். இந்த பொக்கிஷத்திற்குள் விலைமதிக்க முடியாத புதையல்கள் பல இருக்கிறது. அதில் சில மனித கண்ணுக்கும், விஞ்ஞான அறிவிற்கும் தெரியும். பல புலன்களால் உணரமுடியாதவைகள். காட்சிக்கும், கருத்துக்கும் வரமுடியாதவைகள். ஆனால் சத்தியமான சாஸ்வதங்கள். கண்ணுக்கு புலப்படாத இந்த மர்ம உறுப்புகளில் தான் பிரபஞ்ச ரகசியம் பொதிந்து கிடக்கிறது. அதனால், தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று நமது பெரியவர்கள் கூறினார்கள்.

பிரபஞ்ச வெளியில் சில மந்திர ஓசைகள் மிதந்து கொண்டிருக்கின்றன அவைகளை ஈர்க்கும் ஆற்றல் நமது உடம்பிற்கு உள்ளே மறைந்து இருக்கிறது. அந்த ஆற்றல் விழிப்போடு செயல்பட நாம் சில ஓசைகளை, மெளனமாக குறிப்பிட்ட ரிதத்தில் ஏற்படுத்த வேண்டும். அந்த ரித அதிர்வுகள் நமது சக்தி மையங்களை பிரபஞ்ச ஓசைகளோடு ஒருங்கிணைத்து விடும். அப்போது இறைவனின் ஆற்றல் நமக்குள் பெருக்கெடுத்து ஓடும். அந்த நேரம் நாம் விரும்புவது அனைத்தும் கிடைக்கும். நமக்கு தேவையானது எல்லாமே நம்மை தேடி வரும்.

மெளனமான ரிதங்கள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? அதன் பெயர் என்ன? என்ற ஆர்வம் எல்லோருக்குமே ஏற்படும். அதன் பெயர் நாம் அனைவரும் அன்றாடம் அறிந்த பெயர் தான். தினசரி பயன்படுத்தும் பெயரே தான் சந்தேகமே இல்லை. நம்புகிறவர்களும், நம்பாதவர்களும் திரும்ப திரும்ப சொல்லும் மந்திரம் என்பதே அந்த பெயர். மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம். மந்திரம் சொல்லி தியானம் செய்யலாம். மந்திரம் சொல்லி மாயாஜால வேலை கூட செய்யலாம். மந்திரம் சொன்னால் செல்வம் கிடைக்குமா? மந்திரம் பணத்தை அடைவதற்கு உதவுமா? அப்படி ஒரு மந்திரம் இருக்கிறதா? அது என்ன மந்திரம்? என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. ஆம், செல்வத்தை தரும் மந்திரம் இருக்கிறது அதன் பெயர்.

    அமிர்த தாரா மந்திரம்   

சிலருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு அவநம்பிக்கை வரும். சிலர் இது எதோ ஏமாற்று வித்தை என்றும் நினைக்கத்தோன்றும். யார் எப்படி நினைத்தாலும் இது சத்தியம். இது உண்மை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு ஆழமான பள்ளத்தில் கிடந்தாலும், உங்களை தூக்கி நிமிர்த்தி சமுதாயம் என்ற கோபுரத்தின் மேலே, உங்களை உட்கார வைக்கும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. இதை நம்பி கெட்டவர்களை விட, நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம். இவ்வளவு உறுதியாக இந்த விஷயத்தை நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது. முதலில் மந்திரம் என்றால் என்ன? அது நம்மை எப்படி வழிநடத்தும் என்ற தொழில்நுட்பதை நீங்கள் புரிந்து கொண்டால் அந்த காரணம் உங்களுக்கே தெளிவாகி விடும்.

இயற்கை சக்திகளின் அதிபதிகள் தேவதைகள். மந்திரங்கள் என்பது தேவதைகளின் உருவமாகும். அதாவது உண்மையில் தேவதைகள் என்பதே மந்திரங்கள் தான். கடவுளும், தேவதைகளும் இரண்டு வடிவாக இருப்பதாக நமது ஞானிகள் கூறுகிறார்கள். ஒன்று ஒளி வடிவம். இன்னொன்று ஒலி வடிவம். ஒருவகையில் இரண்டுமே ஒன்றுதான். வெளிச்சம் சத்தமாக வருகிறது எனலாம். மந்திரங்கள் என்பதும் சத்தமாக இருக்கின்ற தேவதைகளே. குறிப்பிட்ட தேவதை, குறிப்பிட்ட வரத்தை கொடுப்பது போன்று குறிப்பிட்ட மந்திரம் குறிப்பிட்ட பலனை தருகிறது.

மந்திரங்கள் என்பது ஓசைகளின் கூட்டமைப்பு. ஓசைகள் இல்லாமல், உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. உடலும் இல்லை. இந்த உலகில் காணப்படும் அனைத்துமே ஓசையிலிருந்து தான் வந்ததாகும். கிறிஸ்தவ மதமும் கூட, இதை ஒத்துக்கொள்கிறது. விவிலியம் முதலாம் அதிகாரத்தில், ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது என்று வருகிறது. இதைதான் இந்து மதம் விவிலிய காலத்து முன்பே நாத விந்து என்றது. இறைவனை வேத மந்திர சொரூபன் என்றது.

ஓசைகள் ஒன்று என்றாலும், சமுத்திரத்தில் பல துளிகள் சேர்ந்து ஒரு பேரலையை உற்பத்தி செய்வது போல, ஓசையிலும் பல சிறிய ஓசைகள் உண்டு. அவைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். நேற்று பிறந்த, இன்று பிறந்திருக்கிற, நாளை பிறக்கப்போகிற அனைத்து மனிதர்களுக்குமே தனித்தனியான பிரத்தியேகமான ஓசைகள் இருக்கின்றன. இப்படி நான் மட்டும் கூறவில்லை. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. வாடகை வீடுகள் ஆயிரம் இருந்தாலும், நமக்கென்று உள்ள சொந்த குடிசையில் கிடைக்கின்ற சுதந்திரமும் சுகமும் வேறு எதிலும் கிடைக்காது அல்லவா? அதைப்போல ஆயிரம் மந்திரங்கள் இருந்தாலும், நமக்கென்று தனியாக இருக்கும் மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொன்னால் தான் நமது சொந்த தேவைகள் பூர்த்தியாகும்.

இந்த ஆடை எனக்கு பொருத்தமானது என்று தேர்ந்தெடுக்க முடியும். இந்த கார் எனக்கு பிடித்திருக்கிறது என்று தீர்மானத்திற்கு வரமுடியும். இந்த தண்ணீரில் தான் குளிப்பேன் என்று கூட முடிவு செய்து விட முடியும். காரணம் இவைகள் அனைத்துமே வெளியில் இருப்பது. கண்ணுக்கு தெரிவது. பத்து பேருக்கு அறிமுகமானது. மந்திரம் என்பது அப்படி இல்லையே கண்ணுக்கும், காட்சிக்கும் புலப்படாத சூட்சமம். அது சாதாரண மந்திரத்தையே அடையாளம் காணுவது மகாசிரமம். எனக்கென்று உரியதை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? என்று பலரின் நெஞ்சம் குழம்பும்.

இந்த உலகில் பலகோடி மனிதர்கள் இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி சுபாவங்கள் இருக்கலாம். விந்தையான பழக்கங்கள், விசித்தரமான சூழ்நிலைகள் எண்ணிப்பார்க்க முடியாத எண்ணங்களின் அதிர்வலைகள் என்று ஆயிரம் இருந்தாலும், அனைத்து மனிதர்களுமே மூன்று குணங்களுக்குள் அடங்கி விடுவதாக நமது வேதங்கள் சொல்கிறது. வேதங்கள் சொல்வதை பல்லாயிர ஆண்டுகள் காலதாமதம் செய்து விஞ்ஞானமும் இப்போது ஒத்துக்கொள்கிறது. உறுதியோடு இருக்கும் சத்வம், ஓடிக்கொண்டே இருக்கும் ராஜசம், ஒரே இடத்தில் இருக்கும் தாமசம் இவைகள் தான் அந்த மூன்று குணங்கள். இந்த மூன்று குணத்தில் மங்கோலியன், ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என்று மனித குலங்கள் அனைத்துமே அடங்கி விடுகிறது.

ராஜசம், தாமசம், சத்வசம் ஆகிய மூன்று குணங்களும் தனித்தனியாகவோ ஒருங்கினைந்தோ செயல்படுவது கிடையாது. ராஜசத்திற்குள் சத்வசமும், சத்வசத்திற்குள் தாமசமும் கலக்கின்றன. அப்படி கலக்கும் போது, விகிதாசாரங்கள் மாறுபட்டு, பல்லாயிரக்கணக்கான குணங்களாக சுபாவங்களாக உருவெடுக்கின்றன. அப்படி பலகோடி குணங்கள் உருவானாலும், அவற்றின் வேர்களாக இருப்பது முக்குணங்களே ஆகும்.

மனித குணங்கள் மூன்று என்று தரம்பிரித்த நமது முன்னோர்கள், மனிதனின் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்யும் மந்திரங்களையும் மூன்று பகுதிகளாக பிரித்தார்கள். புலன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றோடு ஒன்று கலந்து பல்வேறுபட்ட கலவைகள் இருப்பது போலவே மந்திரங்களுக்கும், லட்சக்கணக்கான கலவைகள் உண்டு. அந்த கலவைகளின் சூத்திரத்தை கற்றவர்களுக்கு இன்னாருக்கு இந்த மந்திரம் சொந்தமானது என்று முடிவுக்கு வந்து விட முடியும். இந்த இடத்தில் தான் மந்திர சாஸ்திரம் பயில்வதற்கு குரு ஒருவரின் ஒத்தாசை அவசியமாகிறது.


குரு என்பவர், மந்திரத்தின் சூட்சமம் அறிந்தவர், ஒவ்வொரு மந்திரத்தின் அதிர்வும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, அவரது அனுபவத்தில் தெரியும். சிலர் ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும், குருவானவர்களும் மந்திரத்தை உருவாக்கியவர்கள். ஒரு கவிதையை போல, காவியத்தை போல தங்களது புலமையினால் மந்திர சாஸ்திரத்தை உண்டாக்கியவர்கள் என்று நினைக்கிறார்கள் இது முற்றிலும் தவறு. மந்திரம் நாற்காலி அல்ல உருவாக்குவதற்கு. அது கிணறும் அல்ல பத்துபேரின் கூட்டு முயற்சியால் தோண்டுவதற்கு. அது தானாக தோன்றிய சுயம்பு. எப்போதுமே பிரபஞ்ச வெளியில் இருந்து கொண்டே இருக்கும். சாஸ்வதம் ரிஷிகளும், ஞானிகளும் அந்த சாஸ்வதத்தை காதுகளால் மட்டும் கேட்கவில்லை. கண்களாலும் பார்த்தார்கள். அதனால் தான், அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா என்று பெயர். அதாவது அவர்கள் மந்திரங்களை நேருக்கு நேராக நமக்கு பார்த்து சொன்னவர்கள். அந்த மந்திரங்கள் ஏடுகளில் எழுதப்பட்டது மிகவும் சொற்பம். குரு பரம்பரை வழியாக வாழையடி வாழை என வந்து கொண்டு இருப்பதே அதாவது எழுதப்படாத மந்திரங்களே மிக அதிகம்.

பரம்பரையாக குரு உபதேசம் பெற்று வருகின்ற குருமார்கள், இந்த மந்திரர்களை இன்னாருக்கு இன்னது என்று அடையாளம் கண்டு கொடுப்பதில் வல்லவர்கள். அவர்களுக்கு மட்டும் அந்த திறன் எப்படி கிடைக்கிறது? என்று யோசிப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மனிதனும் மூன்று வகையான உடம்பை பெற்றிருக்கிறான் ஒன்று உணவுகளால் ஆன சரீரம். இரண்டாவது உணர்வுகளால் ஆன மனது. மூன்றாவது அதிர்வுகளால் ஆன வெளிச்சம். இப்படி சொல்வது சற்று குழம்பலாம். மூன்றாவது சொல்லப்பட்ட விஷயம் என்னவென்று தெரியாமல் தடுமாறலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடம்பை சுற்றி இயற்கை ஒரு ஒளிவட்டத்தை கொடுத்திருக்கிறது. அது வெண்மை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் என்று பலவகை வண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் குறிப்பிட்ட அந்த மனிதனின் எண்ணங்களை, ஆத்மாவின் தன்மையை அடையாளப்படுத்துவது ஆகும். உதாரணமாக ஊதா நிறத்தில், ஒருவனை சுற்றி ஒளிவட்டம் இருந்தால் அவன் கடினமான சித்தம் கொண்டவனாக இருப்பான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிவட்டம் இருந்தால் அவன் மலர்ச்சியானவனாக இருப்பான். இந்த வட்டத்தை என்னவென்று பார்க்கும் ஆற்றல் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நிறைந்த ஒருசில மனிதருக்கும் உண்டு.

எனது வாழ்வின் அனுபவத்தில் நான், அன்று முதல் இன்றுவரை அதாவது எனக்கு விபரம் தெரியாத காலம் துவங்கி இன்றுவரை எனக்குள் இருக்கும் ஒரு தன்மை என்னவென்றால் ஒருமனிதனை நேருக்கு நேராக நான் பார்க்கும் போது அவனது எண்ண அதிர்வுகள், சில வண்ண நிறங்களாக வெளிப்படுவதை உணர்வேன். இப்போது எனது அனுபவமும், எனது பயிற்சியும் அந்த வண்ணம் என்பது மனிதனை சுற்றி இருக்கும் ஆரா என்பதை நன்றாக அறிய வைக்கிறது. இந்த ஆராவை உன்னிப்பாக கவனித்தால், ஒருவன் ராஜசகுனம் கொண்டவனா, சத்வசத்தின் வசம் இருப்பவனா, தாமசமானவனா என்பதை சுலபமாக கணித்து விட முடியும். இப்படி கணிக்கும் ஆற்றலும், மந்திர சாஸ்திர தேர்ச்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாக உள்ள மந்திரங்கள் இதுவென்று அறிந்து கொள்ளலாம்.

நான்கு வேதங்களில் கூறப்படுகிற அனைத்து வார்த்தைகளுமே மந்திரங்கள் தான். வேதங்களில் உள்ள வார்த்தைகளுக்கு பொருளை தேடுவதை விட, அதன் வார்த்தை ஒலிகளில் மறைந்து கிடக்கும் சக்தியை தேடுவது தான் புத்தி உள்ளவர்களுக்கு அழகு என்று பெரியவர்கள் கூறுவார்கள். வேத மந்திரங்கள் தவிர பல ரிஷிகள் தங்களது தவ வலிமையால் கண்டறிந்த மந்திரங்கள் நிறைய உண்டு. அவைகளை கொண்டு தான் மந்திர சாஸ்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்திரம் தேவதா மந்திரம், பாராயண மந்திரம், பீஜ மந்திரம் என்ற மூன்றுவகை இருக்கிறது.

தேவதா மந்திரம் என்பது சில வரிகளை கொண்டதாகும். இதற்கு உதாரணமாக காயத்திரி மந்திரம், மஹா மந்திரம் போன்றவைகளை சொல்லலாம். பாராயண மந்திரம் என்பது நீண்ட பல சொற்றொடர்களை கொண்டதாகும். ருத்ரம், விஷ்ணு சகஸ்ராநாமம், ஸ்ரீ சூக்தம் போன்றவைகள உதாரணமாக காட்டலாம். பீஜ மந்திரங்கள் என்பது இரண்டு அல்லது மூன்று எழுத்தில் முடிந்து விடும் சக்தி மிகுந்த ஒசைகளாகும். இந்த ஓசைகள் இல்லாமல் உலகம் இல்லை. இந்த ஓசைகளுக்குள் தான் நமக்கு வரம் தரும் சக்தி மறைந்து கிடக்கிறது. நமக்கான பீஜ மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று மீண்டும் மீண்டும் அந்த மந்திரத்தை நாம் சொல்கிற போது, அந்த மந்திர அதிர்வு நமது உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் சக்தி மையங்களை விழிப்படையச்செய்கிறது. அப்படி விழிப்படைந்த சக்தி மையங்கள் பீஜ மந்திரங்களின் அதிர்வுகளோடு கலக்கும் போது பிரபஞ்ச ஆற்றலை மிக சுலபமாக ஈர்க்கிறது அதன் பிறகு நாம் நினைத்தது நடக்கிறது.

மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஞானிகளாக இருப்பவர்கள், சாதாரண மனிதர்கள் முக்தி அடைவதற்கு வழிகாட்ட வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு செல்வத்தை பெறவும், இகவுலக வாழ்வில் சுகத்தை பெறவும், மந்திரங்களை வகைப்படுத்தி வைத்திருப்பது சரியான தர்மம் தானா? என்று சிலர் யோசிக்க கூடும். அவர்கள் ஆதிகால மனிதன் பசிக்காக ஓடி ஆடி வேட்டையாடிய காலத்தில் பெரிய அளவில் சிந்திக்கவில்லை. வேளாண்மையில் புகுந்து பசியாறிய பிறகே தனது சிந்தனையை கூர்மைப்படுத்தினான் என்பதை அறிய வேண்டும். அதாவது மனிதனுக்கு லெளகீக தேவைகள் முடிந்த பிறகே பரமார்த்திக தேவைகளை பற்றி யோசிப்பான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

உப்புக்கும், சீனிக்கும், செப்பு காசுக்கும் அலைந்து  கொண்டிருந்தால் ஆத்திகன் கூட நாத்திகன் ஆகிவிடுவான் என்பது மகாகவி பாரதியின் சக்திய வாக்கு. அதனால் தான் இறைவனை கண்ணார காண்பதற்கு மந்திர ஜெபங்களை உருவாக்கிய நமது முன்னோர்களே, செல்வங்களை பெறுவதற்கும் மந்திர ஜெபங்களை உருவாக்கினார்கள். இன்றைய மனிதர்களுக்கு தேவைகள் அதிகம் இருக்கிறது. தவிர்க்க முடியாத கடமைகளும் அதிகம் இருக்கிறது. இதனால் பணம் என்பதை தேடி அலைய வேண்டிய பரிதாபகரமான சூழலும் இருக்கிறது. இந்த பெரிய பாதாளத்தை தாண்டி வெளியில் வந்தால் தான், அவர்கள் இறைவன் என்ற மகாசமுத்திரத்தை உணர முடியும். எனவே அவர்களை வறுமைக்கடலை தாண்டவைக்க வேண்டிய கடமை நமக்குண்டு. சுவாமி விவேகனந்தர் கூட, பசித்தவன் முன்னால் வேதம் படிக்காதே! சாதம் படை என்று சொன்னார் அதனால் தான் நானறிந்த மந்திர சாஸ்திரத்தை இதுவரை பலருக்கும் கொடுத்து அவர்கள் கடலை கடக்க துணையாக நின்றிருக்கிறேன்.

நிறைய அனுபவங்களை என்னால் கூற இயலும். ஆனால் அத்தனைக்கும் இங்கே இடம் போதாது. மந்திரம், தந்திரம் இவைகள் எல்லாம் இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் என்று மிக ஆழமான முறையில் பிரச்சாரம் செய்து வரும் பெந்தகொஸ்தே சபையை சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு உண்டு. அவர் எந்த அளவிற்கு கர்த்தரின் மீது பக்தி வைத்திருந்தாரோ, அதே அளவிற்கு கர்த்தர் அவர்மீது அன்பு வைத்து, அவரை சோதித்து பார்க்க வறுமையை கொடுத்திருந்தார். அவரிடம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை கொடுத்து, இது உங்களுக்கான மந்திரம் சொல்லி பாருங்கள். உங்கள் வறுமை தீரும். மந்திரம் என்பது மதம் சார்ந்தது அல்ல, அது ஒரு ஆன்மீக விஞ்ஞானம். எனவே எனக்காக சொல்லுங்கள் என்றேன். அவர் என் மீது கொண்ட மரியாதையால் அரை மனதோடு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டபிறகு சொல்லி வந்தார். நாளடைவில் அவரது வறுமை மறைந்தது. இன்று பாளையங்கோட்டையில் சொந்த வீடு, மனைவி, மக்கள், தொழில் என்று நலமோடு வாழ்கிறார்.

இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால், மந்திரங்களை நம்பிக்கை இல்லாமல் சொன்னால் கூட அது பலன் தரும். நிச்சயம் கைவிடாது. அதே நேரம் மந்திரங்கள் இந்துக்களுக்கும், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மட்டுமே சொந்தமானது அல்ல என்பதற்காகவே மந்திரம் காற்றை போல, நீரை போல, ஆகாயத்தை போல எல்லோருக்கும் பொதுவானது. மந்திரம் என்ற நதி, தாகத்தோடு தன்னிடம் வரும் அனைவருக்கும் பரிவு காட்ட தயாராக இருக்கிறது. நாம் அந்த நதியை நோக்கி நடந்து செல்ல தயங்கி கொண்டிருக்கிறோம். நமது தயக்கத்தையும், மயக்கத்தையும் தூக்கி தூர வைத்து விட்டு மந்திர நதியில் குளிக்க முற்படவேண்டும்.

நான் இப்போது சொல்லிவருகிற மந்திரம் பணத்தை மட்டும் தான் கொடுக்கும் என்று தவறாக நினைக்கவேண்டாம். நமது வாழ்வில், நமக்கென்று ஏற்பட்ட துயரங்கள் அனைத்தையுமே தடுத்து ஆனந்தலகரியை மட்டுமே கொடுக்கின்ற அதிசய அட்சயபாத்திரம் இந்த மந்திரமாகும். நோய்கள் உனது தொல்லையா? அதை இந்த மந்திரம் தீர்க்கும். இல்லற வாழ்க்கை அமையவில்லையே? என்ற வருத்தமா அதையும் இந்த மந்திரம் கொடுக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இணங்குவதில் சங்கடமா? அதையும் இந்த மந்திரம் தீர்க்கும். மழலை செல்வம் இல்லையே? என்ற வருத்தம் இருப்பவர்களுக்கு கூட மருந்தாக இந்த மந்திரம் அமையும். சுருக்கமாக சொல்வது என்றால், உங்களுக்கு வரும் எல்லாவிதமான சந்தோஷ கேடுகளையும் இந்த மந்திரம் எதிர்த்து போராடி உங்கள் இதயத்தில் அமைதி பூங்காற்று வீசச்செய்து அங்கே இறைவனை குடியேற்றி விடும்.

தாகம் தீர்க்கும் நதி எதிரே வருகிறது. குளிர்ச்சியை தரும் தென்றல் உங்கள் வீட்டு வாசலில் வீசுகிறது. வாசனை நிறைந்த மல்லிகை பூ உங்கள் பந்தலில் படர்ந்திருக்கிறது. சந்தன குழம்பை வாரி இறைக்கும் வண்ண நிலவு நீலவானில் பவனி வருகிறது. நீங்கள் மட்டும் ஏன் கதவை சாற்றி நாலு சுவற்றிற்குள் உங்களை சிறைப்படுத்தி கொள்ள வேண்டும். உங்களது விடுதலைக்கு உத்திரவாதம் அளிக்க, உங்கள் சுகங்களுக்கு சரியான மேடை அமைத்து தர, இதோ நமது யோகிகள் தந்த மந்திரம் என்ற அமுதகலசம் இருக்கிறது. உங்களுக்கு பரிமாற நான் குருமார்களிடம் கற்ற மந்திர விருந்தை உங்களுக்கு படைக்க தயாராக இருக்கிறேன். பகிரங்கமாக இருகரம் நீட்டி உங்களை வரவேற்கிறேன். வாருங்கள் துயரங்களை வெல்வோம்...


மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


தொலைபேசி எண் :-




அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்:

  • செல்வமும், செல்வாக்கும் பெருகும்.
  • வியாபாரம் அபிவிருதியாகி, கோடிஸ்வர யோகம் தரும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • கணவன்-மனைவி சிக்கல்கள் தீரும்.
  • நல்ல திருமண வாழ்க்கை உடனடியாக அமையும்.
  • குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
  • குழந்தைகள் வளர்ச்சி காண்பார்கள்.
  • கல்வி தடையில்லாமல் வளரும்.
  • வேலை கிடைக்கும். அயல்நாட்டு யோகம் வரும்.
  • நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
  • செவ்வாய் தோஷம் தீர்வுக்கு வரும்.
  • சனி மற்றும் ராகு-கேது தோஷம் தீரும்.
  • நீண்ட நாள் நோய்கள் விலகும்.
  • தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
  • தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்.




+ comments + 16 comments

January 26, 2015 at 2:35 AM

o,k.well.done.we,feel.happy.

January 26, 2015 at 2:36 AM

Ayya when I can meet you to get thekshai.

Anonymous
January 26, 2015 at 2:37 AM

ஐயா நான் அசோக்.....

உஜிலாதேவி பக்கத்தின் தீவிர வாசகன் நான்.
இந்த பதிவை படித்தது முதல் என்னுள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது
ஐயா எனக்கு காசு தரும் மந்திர தீட்சை தாங்கள் தர வேண்டும்

நிச்சயம் தங்களை வந்து சந்திப்பேன். வணக்கம். நமஸ்காரம்.

Anonymous
January 26, 2015 at 2:39 AM

Super. I will come

January 26, 2015 at 2:39 AM

மரியாதைக்குரிய அய்யா, தங்களின் கட்டுரையை படித்து நானும் தங்களுடைய தீட்சை
பெற மிகுந்த அவளாக உள்ளேன். ஆனால் ஒரு இடத்தில் " நம்பியவரை காட்டிலும் நம்பாதவர் அதிகம் பலனடயவில்லை" என்றும் மற்றொரு இடத்தில் நம்பாமல் மத்திரத்தை ஜபம் செய்தாலும் பலன் நிச்சயம் உண்டு '' என்றும் உள்ளது. சற்றே விளக்கவும்

February 14, 2015 at 4:53 PM

நல்ல குரு கிடைக்க என்னக்கு அருள் மந்திரம் தாருங்கள் ??

March 17, 2015 at 1:23 AM

i am siva sammy ji

March 17, 2015 at 8:32 AM

ஐயா எனக்கு காசு தரும் மந்திர தீட்சை தாங்கள் தர வேண்டும்

Anonymous
April 9, 2015 at 2:13 AM

so for iam not able to meet gurujee.but iam following his manthara which gives succes in my daily works.

May 15, 2015 at 10:33 PM

I like this manthira

Anonymous
May 22, 2015 at 3:38 AM

ஐயா வணக்கம் எனக்கு அரசாங்க வேலை இன்னும் கிடைக்கவில்லை எந்த எனக்கு கிடைக்க வில்லை. வெளியில் வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை. படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நான் மேன்மேலும் வெற்றிபெற ரைம பெறுவது எப்படி.

July 6, 2015 at 12:17 AM

குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் ராமு (பி .சீதாராம சந்திரன் ) ஹைதராபாத் 5 ஜூலை அன்றூ குருஜி அவர்கள் தர்சனம் கீட்தைதது குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி

July 6, 2015 at 12:18 AM

குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் ராமு (பி .சீதாராம சந்திரன் ) ஹைதராபாத் 5 ஜூலை அன்றூ குருஜி அவர்கள் தர்சனம் கீட்தைதது குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி

Anonymous
July 25, 2015 at 6:30 AM

அய்யா தங்களிடம் மந்திர தீட்சை நான் பெற்றுள்ளேன் நான்
அந்த மந்திரம் உச்சரிக்கும் போது சில அதிசய உருவங்கள் தென்படுகின்றன
அவை வர காரணம் என்ன சொல்லுங்கள் குருஜி

Anonymous
August 16, 2015 at 7:01 AM

வணக்கம் ஐயா, தபாலில் மந்திர தீட்சை பெறுவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?


Next Post Home
 
Copyright © . பயிற்சி